“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” நன்றி தெரிவித்த விஜய்…!

0
25

தனது அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தென்னிந்திய நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை நடிகர் விஜய் தனது உத்தியோகப்பூர்வ அரசியல் பயணம் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டிருந்தார்.

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் புதிய கட்சியை ஆரம்பித்த அவர், தனது கட்சியிக் அரசியல் செயல்பாடுகள் குறித்தும் அறிவித்திருந்தார்.

பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் விஜய்யின் அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தனது அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். அன்புடன், விஜய்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here