எபடீன் நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞன் இன்று சடலமாக மீட்பு.

0
126

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினி;கத்தேனை எபடீன் நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று மாயமான இளைஞன் ஒருவர் இன்று 29 திகதி சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (28) ம் திகதி இடம்பெற்றுள்ளது குறித்த இளைஞன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற போது நேற்று நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளார் அப்போது நீராடிக்கொண்டிருக்கும் போது தன்னை அறியாமல் ஆழமான பகுதி நீர் இழுத்துச்சென்று மாயமானதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளன.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலா டின்சின் பிரதேசத்தில் வசிக்கும் கிசான் இனோஜன் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கிய இளைஞனை மீட்பதற்கு நேற்று பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும் நேற்று அவரை கண்டுபிடிக்க முடியவில்லை இந்நிலையில் இன்றைய தினம் கடற்படை சுளியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களால் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here