எப்பாவல பொஸ்பேற்று நிறுவனத்தில் திடீரென பரவிய தீ காரணமாக அதன் வழங்கல் பிரிவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ காரணமாக தணிக்கை பிரிவு மற்றும் காப்பகமும் சேதமடைந்துள்ளதாக தெரிவந்துள்ளது.
இந்த தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது
இந்த தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறை மேலும் தெரிவிக்கின்றது.