எமது வெற்றி உறுதி – மக்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டோம் : மகிந்த ராஜபக்ச

0
23

சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தலில் தோற்றுப் போகாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியாகத் தெரிவித்துள்ளார்.மேலும் மக்களிடமிருந்து எமது கட்சி விலகிப் போகாது எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன முன்னணி தோற்கடிக்கப்படும் என தாம் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

தான் தோற்கடிக்கப்பட்டால் தோல்வியை ஏற்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தான், எங்கே தவறு செய்தார் என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மக்களிடம் இருந்து கட்சி விலகிச் செல்ல முடியாது என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here