எரிபொருளுக்கான வரி அதிகரிக்கப்பினால் நுகர்வோர் பாதிக்கப்படமாட்டார்கள்!

0
112

எரிபொருளுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் சாதாரண நுகர்வோருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.

எந்தக் காரணத்தினாலும், ஐ.ஓ.சி. நிறுவனமோ, சிபெட்கோ நிறுவனமோ சாதாரண எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது. அத்துடன், சிபெட்கோ நிறுவனத்தில் எந்தவொரு எரிபொருளினதும் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.

இருப்பினும், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தினால் விநியோகிக்கப்படும் சில எரிபொருள் வகைகளின் விலை தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அந்த எரிபொருள் வகையை விலைக்கு வாங்காமல், சாதாரண எரிபொருளை கொள்வனவு செய்யலாம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here