எரிபொருள் இன்றி மலையகத்தில் உள்ள பல எண்ணை நிரப்பு நிலையங்கள் இன்று காலை முதல் பூட்டப்பட்டுள்ளன.தங்களது வாகனங்களுக்கு எரிபொருள் இன்றி பல வாகனங்கள் எண்ணை நிரப்பு நிலையங்களியே நிறுத்தப்பட்டுள்ளன.
பெற்றோல் இல்லாததன் காரணமாக ஆட்டோ சாரதிகள் தங்களது தொழில்களை மேற்கொள்ள முடியாது மிகவும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றன.
டீசல் இல்லாத காரணத்தினால் பல தனியார் பஸ்கள் இன்றைய தினம் சேவையில் ஈடபடவி;ல்லை அதிகமான பஸ்கள் எண்ணை நிரப்புவதற்காக உள்ள வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு சில எண்ணை நிரப்பு நிலையங்களில் மாத்திரம் டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்ட போதிலும் அவற்றில் நீண்ட வரிசை காணப்பட்டன.
ஹட்டனில் உள்ள மூன்று எண்ணை நிரப்பு நிலையங்களிலும் இன்று (18) பெற்றோல் இல்லை இதனால் பெற்றோல் வாகன சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளன.
இதே நேரம் இன்று எரிவாயு வருவதனை எதிர்ப்பார்த்து இன்று காலை
எரிவாயுவினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நின்ற போதிலும்
எரிவாயு விநியோகிக்கப்படவில்லை இதனால் பொது மக்கள் வெற்று சிலிண்டர்களை எரிவாயு விற்பனை நிலையத்திக்கருகாமையில் உள்ள வரிசையில் வைக்கப்பட்டிருந்ததனை காணக்கூடியதாக இருந்தன.
மலைவாஞ்ஞன்