கெஸ்பேவ – பண்டாரகம வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டீசல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்தவர்களுக்கும், உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக மாறியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களின் தலையீட்டால் சம்பவம் பெரும் மோதலாக மாறியது.
அதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் வந்து மோதலை சமரசம் செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.