எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
சீதுவ, முத்துவடிய, குஸ்வல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது முச்சக்கர வண்டிக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் 69 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.