எலிக் காய்ச்சல் கால்நடைகளுக்கும் தொற்றியுள்ளதா என அறிய யாழ் செல்லும் விசேட குழு

0
62

லெப்டோபைரசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சலைப் பரப்புகின்ற வைரஸ் கால்நடைகளுக்கும் தொற்றியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்காகக் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் விசேட நிபுணர் குழுவொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here