எவ்வாறு வாக்களிக்க வேண்டும்?

0
16

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும் என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சரியான முறையில் வாக்களிக்கும் முறைகள் பின்வருமாறு..

வாக்கினை ‘1’ என்றும் விருப்ப வாக்குகளை ‘2’ மற்றும் ‘3’ என்றும் குறிக்கலாம்.

ஒரு வாக்கை மட்டும் அளிப்பதற்கு, ‘1’ அல்லது ‘X’ எனக் குறிக்கலாம்.

எனினும், ஒரு வாக்கை அளிக்கும் போது ‘1’ மற்றும் ‘X’ என்ற இரண்டையும் குறிக்க வேண்டாம்.

‘X’ அடையாளம் இட்ட பின்னர் வேறு எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம்.

1 2 3 4 5 6 போன்ற பல இலக்கங்களையும் குறிக்க வேண்டாம்.

இந்த அனைத்து வாக்குகளும் நிராகரிக்கப்படும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here