ஏப்ரல் 2ஆம் திகதிக்கு பின் 4 மணிநேரம் மட்டுமே மின் வெட்ட எதிர் பார்ப்பு.!

0
121

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.

எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்குச் சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும். எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here