ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்த புதினா !!

புதினாக் கீரை சிறந்த பசியுணர்வு ஊக்கியாக செயல்படுகிறது. மேலும் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் அடைய செய்து வயிறு மற்றும் குடல்களின் செயல்பாடுகளை சீராக்குகிறது.

முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.

புதினாவில் இருக்கும் வேதிப்பொருட்கள் நமது எச்சிலையும், வயிற்றில் ஜீரண அமிலங்கள் அதிகம் சுரக்கச் செய்து உணவுசெரிமானம் எளிதாக நடைபெற உதவுகிறது.

புதினாவில் இருக்கும் மென்தால் எண்ணெய் குளிர்காலங்களில் ஏற்படும் மூக்கடைப்பை குணப்படுத்துகிறது. மேலும் தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் இருக்கும் அடைப்புகளை நீக்கி, சீரான சுவாசம் காற்று கிடைக்கும்படி செய்கிறது.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு தொல்லை இருக்காது.