ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் உடல் ரீதியாக துன்பப்படுவதாக வருத்தம்

0
74

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய நபர், தான் உயிருடன் இருப்பவர்களில் அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்தாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்பப்படுவதாக கூறியுள்ளார்.

இந்தியாவின் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் பயணித்த 241 பேரில் 240 பேர் உயிரிழந்தனர்,  39 வயதான விஸ்வாஷ்குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.

விபத்துக்குப் பிறகு வெளியான காணொளியில், உடல் முழுவதும் காயங்களுடன் இடிபாடுகளில் இருந்து விஸ்வாஷ்குமார் ரமேஷ் வெளியேறும் காட்சி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விபத்துக்குப் பிறகு லெய்செஸ்டரில் உள்ள தனது வீட்டில் ரமேஷ்,  மனஉளைச்சல் சீர்குலைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் பேச முடியாத நிலையில் உள்ளார என அவரது ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

தான் இப்போது தனியாக இருப்பதாவும், தனது அறையில் அமைதியாக அமர்ந்து இருப்பதையே விரும்புவதாககும் விஸ்வாஷ்குமார் ரமேஷ்  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here