தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கதாநாயகியை மையமாகக் கொண்டு தயாரித்து நடித்துள்ள ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. வெளியான சில நாட்களிலேயே இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சமந்தாவுக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து
ரிலீஸுக்கு முன் நடந்த சுவாரஸ்ய சம்பவம்
இந்த வெற்றியின் பின்னணியில், படத்தின் வெளியீட்டுக்கு முன் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது. படம் வெளியாகும் முன், தனது தோழி மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர திரையரங்கு உரிமையாளர் ஒருவரிடம், “சமந்தா நடித்த இந்த படத்திற்கு ஓப்பனிங் எப்படி இருக்கும்?” என்று கேட்க வைத்ததாக கூறப்படுகிறது.
‘ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவார்கள்?’
அதற்கு அந்த திரையரங்கு உரிமையாளர், “ஹீரோயின் படத்தை பார்க்க யார் வருவார்கள்? நடிகையின் கவர்ச்சிதான் பேசப்படும். நடிப்பு பெரிய அளவில் பேசப்படாது. இப்படங்களுக்கு பெரிய ஓப்பனிங் கிடைப்பது கடினம்” என்று பதிலளித்தாராம். அந்த உரையாடலை சமந்தாவும் தொலைபேசி மூலம் நேரடியாகக் கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
வெற்றிக்குப் பிறகு சமந்தாவின் பதிலடி
இந்நிலையில், ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலைக் கடந்ததாக கூறப்படும் நிலையில், அந்த திரையரங்கு உரிமையாளரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இனி இரண்டாம் மற்றும் மூன்றாம் தர திரையரங்குகளில் ஹீரோயின் படங்கள் குறித்து யாராவது கேட்டால், ‘இல்லை’ என்று சொல்லாதீர்கள். ‘பார்க்கலாம்’ என்று சொல்லிப் பழகுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண் கதாநாயகிகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க முடியும் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




