ஏழு வயது சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது

0
77

பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஏழு வயது மற்றும் இரண்டு மாத சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இரு இளைஞர்கள் அட்டமலை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாய் கொழும்பு, கொட்டாவ பிரதேசத்தில் வேலைக்காக சென்றுள்ளதுடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார்.

தனது மகள் உள்ளூர் இளைஞராலும் தாயாலும் துன்புறுத்தப்பட்டதாக அத்தாய்க்கு, தனது சகோதரி தொலைபேசியில் தெரிவித்தார்

வீட்டிற்கு வந்து சிறுமியிடம் தகவல் கேட்டபோது, ​​அக்கம்பக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களில் ஒருவர் ஒ2023 ஒக்டோபர் முதல் சிறுமியை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞன் 2024 ஜனவரி 13 அன்று கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அட்டமலை பொலிஸில் மு தாய் றைப்பாடு செய்ததையடுத்து, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவன் மற்றும் 16 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். அட்டமலை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here