ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

0
121

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கிலுள்ள சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்த போது அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் பாக்தாதியும் ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக ஈராக்கின் அல் சுமேரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகவலை ஈரானிய அரசாங்க செய்தி ஊடகம் மற்றும் அரச சார்பு துருக்கி பத்திரிகையுமான யெனிஸ் சபக்கும், அரபு செய்தி நிறுவனமான அல் அமக்கை மேற்கோள் காட்டி இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஈராக்கின் சமாரா நகரில் 1971 ஆம் ஆண்டு பிறந்த அபுபக்கர் அல் பக்தாதி, பக்தாதிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டதாரியும் ஆவார். ஐ.எஸ். அமைப்பு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இவர், அல்கெய்தா உட்பட இஸ்லாமிய போராட்ட அமைப்புக்கள் பலவற்றில் செயற்பட்டுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here