ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது தொடர்பில் மறுபரிசீலினை செய்ய வேண்டும்!

0
129

ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சில ஏற்றுக்கொள்ள முடியாத செயல்பாடுகள் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பது தொடர்பில் மறுபரிசீலினை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.மலையக மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வெற்றி பெற்ற 18 உறுப்பினர்கள் 21.03.2018 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிட்டது. இதன்போது நாம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அந்த கோரிக்ககைள ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக்கொண்டது

ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்பு தற்பொழுது உறுப்பினர்களை நியமனம் செய்யும் பொழுது எங்களுடைய உறுப்பினர்களுக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை.

பலர் பட்டியிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்த செயல்பாடானது ஐக்கிய தேசிய கட்சி மீது மலையக மக்கள் முன்னணிக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயல்பாடுகளுக்கு காரணமாக இருப்பவர்கள் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமை தாங்குபவர்கள் என தெரியவந்துள்ளது.

இவர்களின் இந்த செயல்பாடு தொடருமாக இருந்தால் நாம் ஒரு கட்சி என்ற வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும். ஐக்கிய தேசிய கட்சி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். எனவே இது தொடர்பாக நாம் மிக விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் ஹசீம் உடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here