கொழும்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் சிலவற்றின் முடிவுகள் தற்போதைய நிலையில் வௌியாகியுள்ளன.
அதன்படி , இம்முறை அநேகமானோரால் எதிர்ப்பார்க்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முடிவுகள் சற்று முன் வெளியாகின.
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இலட்சத்து 31 ஆயிரத்து 353 வாக்குகளைப்பெற்றுள்ளது.
அக்கட்சி 60 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 60 ஆயிரத்து 87 வாக்குகளைப் பெற்று 23 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.