ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் நிலவும் தேவைகள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கொட்டகல மேபீல்ட் தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.