ஐபிஎல் தொடர் பயிற்சி ஆரம்பம் – தோனிக்கு மலர்தூவி உற்சாகமான வரவேற்பு!

0
88

பத்து அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். துடுப்பாட்ட போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் எதிர்வரும் 31-ந் திகதி முதல் மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேறும் தொடக்க சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக நேற்றிரவு சென்னை வந்த தலைவர் தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர்தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று ஆரம்பமாகியது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here