ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகிறது பிரித்தானியா!

0
96

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) முழு பிரித்தானிய மக்களும் உற்சாகமாக வாக்களித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகம் கிடைத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

43 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக நேற்று (வியாழக்கிழமை) பிரித்தானிய மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்த நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக 52 வீதமான மக்களும் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 48 வீதமான மக்களும் தமது வாக்குகளை அளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவளித்து பரப்புரை நிகழ்த்தி வந்த பிரித்தானிய UKIP கட்சி தலைவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஜூன் 23 ஆம் திகதி பிரித்தானியாவின் சுதந்திரதினம் என்றே கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக இருக்குமானால் எதிர்வரும் மாதங்களில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் பாரிய மாற்றங்களும் தாக்கங்களும் உணரப்படும் என பல்வேறு ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், பிரித்தானிய மக்களின் விருப்பம் என்னவென்பது வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே பிரித்தானிய நாணயமான பவுண்களின் பெறுமதி பாரிய வீழச்சியை சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீழ்ச்சியானது 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் பவுணுக்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here