ஐரோப்பிய ஒன்றிய வாக்கெடுப்பு: குறுகிய பெரும்பான்மையில் பிரிட்டன் நீடிக்கக்கூடும்!

0
136

இலண்டன்: நேற்று நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்ற பிரதமர் டேவிட் கெமரூனின் பிரச்சாரத்திற்கு ஏற்ப, மிகக் குறுகிய பெரும்பான்மையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும் என ஆரம்ப கட்ட முடிவுகள் – கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பல இடங்களில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளதால், முடிவுகள் மாறி மாறி வரலாம் என்றும் இறுதி முடிவு மிகக் குறுகிய வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி வரையிலான முடிவுகள்படி 50.7 சதவீத வாக்காளர்கள் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றும், 49.3 சதவீத வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிக்க வேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here