ஐஸ் போதைப்பொருளுடன் நுவரெலியா பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!

0
40

ஐஸ் போதைப் பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று (19) திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா தலைமையக சிரேஷ்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி , பொலிஸ் பரிசோதகர் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து சந்தேகநபரை பரிசோதனை செய்த போது அவர் தங்கியிருந்த அறையிலும் அவரது காற்சட்டை பையிலிருந்தும் 13 பக்கற்றுகள் அடங்கிய 2590 மில்லி கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 24 வயதுடைய பதுளை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த சந்தேகநபர் இதற்கு முன்னரும் கொழும்பு புளூமெண்டல் பொலிஸ் நிலையத்தில் இலஞ்ச ஒழிப்பு பிரிவில் கடமையாற்றியதாகவும் அங்கும் இவ்வாறான தவறான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டமையால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டு எச்சரிக்கை வழங்கப்பட்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரை இன்றைய தினம் (20) செவ்வாய்க்கிழமை நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here