ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையிலான உடன்படிக்கைக்கு அனுமதி கோரப்பட உள்ளது.
தேசிய அரசாங்கம் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டாண்டுகால உடன்படிக்கையை ஐந்து ஆண்டுகள் வரையில் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்தத் தீர்மானம் தொடர்பில் அந்தந்த கட்சிகளின் செயற்குழு மற்றும் மத்திய செயற்குழுகளின் அனுமதியானது எதிர்வரும் இரண்டு வாரங்களில் பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.
மேலும், நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பது குறித்த யோசனை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அவ்வாறே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலும் இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளது.