ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி

0
71

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது.

அதன் படி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி சன்ரைசர்ஸ் அணி (SRH), 20 ஓவர்கள் முடிவில் 277 ஓட்டங்களை குவித்துள்ளது.

அதேவேளை, 17 ஆண்டுகளிலும் இப்படி ஒரு சாதனையை இதுவரை எந்த அணியும் செய்ததில்லை என்ற நிலையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்படுத்தியுள்ளது.அத்தோடு, இதற்கு முன்னராக 263 என்ற அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் சாதனை இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி சார்பில் சிறப்பாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 80 ஒட்டங்களை குவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here