ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாடசாலை வகுப்பறை கட்டிடம் இடிப்பு

0
92

இந்தியாவில் ஒடிசாவில், பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2 ஆம் திகதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் கடுகதி ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து இடம் பெற்றது.

இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பாடசாலைக்குச் செல்வதற்கு மாணவ, மாணவிகள் அச்சம் தெரிவிப்பதாக பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோர் புகாரை தொடர்ந்து பாடசாலையின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டும் பணிகள் ஆரம்பித்துள்ளது. கோடை விடுமுறை முடிவதற்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜூன் 19ம் திகதிக்குள் இடித்த இடத்தில் புதிய வகுப்பறை கட்டி முடிக்கப்படும் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்பட்டிருந்ததால் பாடசாலைக்கு வர மாணவர்கள் அச்சம் தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில் வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here