ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணி உடன்படுமாயின் அந்தக் கட்சியுடன் இணைவதற்குத் தயார் என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் கூட்டணி அமைக்கப்படுமானால் அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அமையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பொதுஜன பெரமுன மீது குற்றஞ்சாட்டினால், நாட்டுக்கு வேலைத்திட்டத்தை முன்வைக்க முடியாது எனவும், நாட்டிற்காக தமது கட்சி தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அனுராதபுரம் மாவட்டத்தின் சார்பில் நேற்று (10) செலுத்தியதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.c