ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக பாட­சா­லைக்கு செல்­லாது சுற்­றித்­தி­ரிந்த14 வயது மாணவி – பதுளையில் சம்பவம்!!

0
113

பெற்­றோரின் எச்­ச­ரிக்­கை­யையும் மீறி, ஊர் சுற்றித் திரிந்த பதி­னான்கு வயது நிரம்­பிய மாண­வி­யொ­ரு­வரை, சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் பெண் பொலி­ஸாரின் துணை­யுடன் கைது செய்து, பதுளை நீதிவான் நீதி­மன்­றத்தில் நேற்று ஆஜர் செய்­தி­ருந்­தனர்.

நீதி­பதி நயந்த சம­ர­துங்க அம்­மா­ண­வியை, எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை பண்­டா­ர­வ­ளை­யி­லுள்ள சிறு­மிகள் காப்­ப­க­மொன்றில் தடுத்து வைக்­கும்­ப­டியும், அன்­றைய தினம் இம்­மா­ணவி குறித்த பூர்­வாங்க அறிக்­கையை நீதி­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கும்­ப­டியும் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் மற்றும் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்டார்.

இம்­மா­ணவி பாட­சா­லைக்கு செல்­வ­தாகக் கூறி, கடந்த ஒரு வரு­ட­மாக பாட­சா­லைக்கு செல்­லாமல் ஊர் சுற்றித் திரிந்­துள்ளார்.

மாணவி பாட­சா­லைக்கு வராமை குறித்து அதிபர், ஆசி­ரி­யர்கள் மாண­வியின் பெற்­றோ­ரி­டமும் வின­வி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து பெற்றோர் மாண­வியைக் கண்­டித்தும் எச்­ச­ரித்தும் எப்­ப­யனும் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லையில் இது தொடர்பில் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு அறி­விக்­கப்­பட்­டது.

இதன்பின்னரே, இம்மாணவி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here