ஒரு கோடிக்கு மேல் மின்கட்டணம் செலுத்தாத கெஹலிய

0
107

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல், அமைச்சர் கெஹலியவின் குறித்த வீட்டின் மின் கட்டணம் செலுத்தப்படாது இருந்து வந்துள்ளதாகவும், அதன் பிரகாரமே இவ்வளவு பாரிய தொகை கட்டணமாக சேர்ந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தகைய மிகப் பெரும் தொகை மின் கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், அதனை செலுத்தச் சொல்வற்காக இலங்கை மின்சார சபை அதிகாரிகள் கடந்த 2021 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கள விஜயம் ஒன்றினை, அமைச்சர் கெஹலியவின் வீட்டுக்கு முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது அமைச்சர் கெஹலிய அங்கிருக்கவில்லை எனவும், அவரது மனைவியை சந்தித்து மின் கட்டணத்தின் விபரப் பட்டியலையும் கையளித்து அதனை செலுத்துமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் அதன் பின்னரும் அந்த கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கும் இலங்கை மின்சார சபை, கடந்த 2022 ஜனவரி மாதம் 11 ஆம் திகதி கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று வரை அக்கட்டணம் செலுத்தப்பட்டிருக்கவில்லை என இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here