ஒரு நாடு பின்னடைவதற்கு காரணம் உழைக்கும் வர்க்கத்தினை மதிக்காமையே_ சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் தெரிவிப்பு.

0
126
பொதுவாக துறவிகள் என்றால் ஆன்மீக வாழ்க்கையில் மாத்திரம் ஈடுபடுபவர்கள் ஜெபம் தியானம் செய்பவர்கள் அல்லது பூஜை வழிபாடு செய்பவர்கள் அல்லது சொற்பொழிவு செய்பவர்கள் என்ற கருத்தே நிலவி வந்துள்ளது. ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது.
ஆனால் சுவாமி விவேகானநந்தர் அதனை மாற்றியமைத்து நாட்டின் முன்னேற்றத்திற்காக துறவிகள் உதவி செய்ய முடியும் என்ற ஒரு புதிய கருத்தை முன்வைத்தார்;. இந்த எண்ணத்துடன் தொடங்கப்பட்டது தான் இந்த ராமகிருஷ்ண மிசன் என்ற தொண்டர் நிறுவனம் மாதா பிதா குரு ஆகியவர்களை போற்ற வேண்டும் தைத்திரியோகத்தில் உள்ளது அதில் படிப்பறிவு அற்றவர்களையும் வறியவர்களை கடவுளாக நினைத்து தொண்டு செய்ய வேண்டும் என்ற வாசகத்தினை சேர்த்தவர் சுவாமி விவேகாநந்தர். இவற்றை எடுத்து நோக்கும் போது சுவாமி விவேகாநந்தர் ஒரு ரிஷி என்பது எவ்வித சந்தேகமும் இல்லை.
அவரால் கூறப்பட்ட இரண்டு வாக்கியங்களையும் கருத்தாக கொண்டு ராமகிருஷ்ண மிசன் பல்வேறு இடங்களில் இன்று தொண்டு புரிந்து வருகின்றது.
ஒரு நாடு பின்னடைவதற்கு காரணம் அந்த நாட்டில் உழைக்கும் மக்கள் கவனிக்கப்படாமையே உழைக்கும் மக்களுக்கு எந்த வித உதவியும் செய்யாமல் இருப்பதே என்ற உண்மையினை உணர்ந்து இந்த நிறுவனத்தினை இந்தியாவில் ஆரம்பித்தார்;. இதற்கு அவர் கூறிய சிறந்த உதாரணம் நாடு குடிசைகளில் வாழ்கிறது என்றார். ஆகவே குடிசைகளில் வாழ்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். அப்போது ஒரு நாடு முன்னேறும். அந்த வகையில் பல்வேறு இடங்களில் பலவிதமான தொண்டுகள் நடந்து வருகின்றன
இலங்கையில் கூட வடக்கு கிழக்கு கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் ராமகிருஷ்ண மிசன் ஊடாக பல விதமான உதவிகளை செய்து வருகிறோம்; இதனூடாக வறிய மாணவர்களுக்கு படிப்பதற்கு புத்தகங்கள் உணவு சுகாதாரம், நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட விடயங்களை கவனித்து வருகின்றோம்.
எனினும் மலையகத்திற்கு அவ்வாறான உதவிகள் கிடைக்கவில்லை தற்போது இதனை கருத்தாக கொண்டு இந்த நிறுவனம் இங்கே தொடங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள பின் தங்கிய மாணவர்கள் வறிய குடும்பங்கள் நலம் பெறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்;

 

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here