காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி காவல்துறையினரால் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை காவல்துறையினர் இதனை உறுப்படுத்தியுள்ளனர்நிதிமோசடி குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அவர் பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நிதிமோசடி குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.