ஒரே நாளில் ரி ரிலீஸ் ஆகும் விஜய் மற்றும் அஜித் சூப்பர்ஹிட் படங்கள்!

0
119

சமீபகாலமாக பழைய படங்களின் ரி ரிலீஸ் அதிகளவில் நடந்து வருகிறது. புதுப்படங்களின் வரவேற்புக் குறைவாக உள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்குகள் இதுபோல பழைய படங்களை ரி ரிலீஸ் செய்கின்றனர்.

சமீபத்தில் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன.

இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கம் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி விஜய்யின் காதலுக்கு மரியாதை மற்றும் அஜித்தின் வாலி ஆகிய திரைப்படங்களை ரி ரிலீஸ் செய்கிறது. இந்த படங்களுக்கு டிக்கட் கட்டணமான 69 ரூபாய் மட்டுமே நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here