4வது இந்திய ஓபன் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தாய்நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றார் ஜனனி தனஞ்சனா.
பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் 5.01 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இந்த போட்டி நான்காவது முறையாக இந்தியாவின் பெங்களூரில் நடைபெறுகிறது.
இதேவேளை, பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இலங்கையின் மற்றுமொரு சம்பியனான குமுது பிரியங்கா 4.71 மீற்றர் தூரம் பாய்ந்து சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.