ஒர்லாண்டோ தாக்குதல்: ஓமாரின் திட்டத்தை முன்பே அறிந்திருந்த மனைவி மீது விரைவில் வழக்கு!

0
195

ஒர்லாண்டோ – கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒர்லாண்டோவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான கேளிக்கை விடுதியில் புகுந்து 49 பேரை சுட்டுக் கொன்ற ஓமார் மாட்டீன், தனது சதித்திட்டத்தை முன்பே தனது மனைவியிடம் கூறியிருக்கின்றான்.

அவனது திட்டத்தை முன்பே தெரிந்தும் அதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்காமல் மறைத்த குற்றத்திற்காக ஓமாரின் மனைவி நூர் சல்மான் மீது விரைவில் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.

அமெரிக்காவின் இரட்டை வர்த்தக கோபுரம் தாக்குதலுக்குப் பின் நடந்த மிகப் பெரிய தாக்குதலுதாக இச்சம்பவம் கருதப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here