ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் முதன் முறையாக பங்கேற்கும் அகதிகள் அணி!

0
237

ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோவில் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அகதிகள் அணியை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.

அணியில் 6 வீரர்கள், 4 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். ஒலிம்பிக் கொடியின் கீழ் இவர்கள் பங்கேற்பார்கள். தெற்கு சூடான், சிரியா, காங்கோ, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அகதிகள் அணி பங்கேற்க இருப்பது இதுவே முதல்முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here