ஓமான் நாட்டில் உள்ள இலங்கைப் பணிப் பெண்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

0
61

இலங்கைப் பணிப் பெண்கள் தொடர்பிலான அறிவிப்பொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ளது.

ஓமானில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தற்போது பல பெண்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாதுகாப்பு இல்லத்தில் தற்போது 77 இலங்கைப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் 12 பேர் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 5 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here