ஓய்வு பெறுகிறார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

0
30

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு பேராயர் பதவியில் இருந்து ஓய்வு பெற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது ஓய்வு தொடர்பாக பாப்பரசருக்கு கர்தினால் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.75 வயதுக்கு மேற்பட்ட பேராயர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவிப்பது கிறிஸ்தவ மத மரபு. அதன்படி, கர்தினால் மல்கம் ரஞ்சித் இது குறித்து திருத்தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவரின் பேராயர் பதவியை தொடர்வதா இல்லையா என்பதை பாப்பரசர் முடிவு செய்வார். எனினும், பதவி மாறினாலும், மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கர்தினால் நிலை அப்படியே இருக்கும்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டாம் கர்தினால் ஆவார். இவருக்கு முன் இலங்கையின் முதல் கர்தினாலாக இருந்தவர் தோமாஸ் கூரே (கர்தினால்: 1965-1988).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here