பெருந்தோட்ட தமிழ்மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
பெருந்தோட்ட தமிழ்மொழி மூலமான பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நடவடிக்கை மேந்கொளவதற்கு மாகாண சபைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேசான் விதானகே இன்று வாய் மூலம் கேட்டிருந்த கேள்விக்கு கல்வி அமைச்சர் பதிலலிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
தேவையான தகுதியான தமிழ் மொழி ஆசிரியர்கள் இல்லாமையே இதற்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்..