பசறை, எல்டெபிவத்தை தோட்டத்தில் கசிப்பு” உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடத்தை சுற்றி வளைத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்தநிலையில் பசறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
மேற்படி தோட்டத்தில், சட்டவிரோதமாக கசிப்பு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற அதரடிப் படையினர்மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
.
இச்சம்பவம் தொடர்பில், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்காண்டு வருகின்றனர்