கஜேந்திரன் மீதான தாக்குதல்-வேடிக்கை பார்க்கும் இந்தியா; நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

0
64

இது தான் இந்தியா தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்கும் முறையா என கேள்வி? தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் நடத்திய தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தனமு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றின் மூலம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல் துறையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்தி மீதும், அதில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் 50 இற்கும் மேற்ப்பட்டவர்களால் தாக்குதல் நடத்தியமை கண்டத்திற்குரியது.

தமிழ் மக்களின் ஜனநாயக பிரதிகளின் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன்? இது தான் இந்தியா தமிழர்களுக்கான உரிமையை
பெற்றுக்கொடுக்கும் முறையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை இத்தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருவதோடு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு ஆதரவாகவும் பலர் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here