கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தவலந்தன்னை வேவண்டன் தோட்;டத்தில் சுமார் 08 வருடங்களாக் மலையில் இருந்து பாரிய கற்பாறைகள் மக்களின் குடியிருப்புகளை நோக்கி வந்த வண்ணம் இருகின்றது. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை மேலும் அதிகமாகவே இருக்கின்றன. இங்கு 56 குடுபங்களை சேர்ந்த 276 பேர் வசித்து வருகின்றனர். தொடர்ந்து இவ்வாறு மழைக்காலங்களில் கற்பாறைகள் உடைந்து வருவதால் இரவு வேலையில் இந்த மக்கள் அருகில் உள்ள வேவண்டன் தழிழ் வித்தியாலத்தில் தங்க வைக்கபடுகின்றனர.
பின்னர் பகல் வேளையில் வீடு திரும்புகின்றனர். இந்த நிகழ்வு தொடர்ந்து 08 வருடங்காக இடம் பெருவதாக பாதிக்கபட்ட மக்கள் கூறுகின்றனர். இந்நிலை தற்போதும் தொடர்ந்து வண்ணம் இருக்கின்றது. இதற்கு தீர்வாக இவர்களுக்கு பிரிதொரு இடத்தில் வீடுகள் அமைக்க நடவடிக்கை மேற்க் கொள்ளபட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சழூதாய அபிவிருத்தி அமைச்யினால் 20 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அதில் இது வரைக்கும் குறிபிட்ட வீடுகளே அமைக்கபட்டுள்ளன. மிகுதியான வீடுகளையும் கூடிய விரைவில் அமைத்து தங்களின் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்விணை பெற்று தருமாறு மக்கள் கோரிக்;கை விடுக்கின்றனர். மேலும் 36 வீடுகள் கட்டுவதற்க்கான நடவடிக்கைகள் மேற்க் கொள்ளபட்டு வருகின்றன. மேற்படி 56 வீடுகளையும் ஒரே இடத்தில் முறையாக கட்டுவதற்கு பொருத்தமான இடம் இப்பிரதேசத்தில் இல்லை என்பதும் பாரிய குறைபாடாக இருக்கினற்து. எது எவ்வாறாயினும் இந்த மக்களின் குடியிருப்புகளை கூடிய விரைவில் கட்டி கொடுத்து இவர்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
பா.திருஞானம் .