கடனட்டை பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

0
43

கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயத்தை அதிபரின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க (Asu Marasinghe) தெரிவித்துள்ளார்.

நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) குறிப்பிட்டுள்ளதாக ஆசு மாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடனாக 336 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.நாடு தற்பொழுது செல்லும் பாதையை மாற்றினால் பாரதூரமான பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரம் இன்னமும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதாகவும், ஆனால் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கையின் செயற்பாடு வலுவாக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.

மேலும்,கடந்த ஆண்டு (2023) டிசம்பர் மாதத்திற்குள் சமூக நலச் செலவினங்களைத் தவிர அனைத்து அளவு இலக்குகளையும் இலங்கை அடைந்துள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here