கடிதத்தை நபி ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்பவும்! : ஞானசார தேரர்

0
131

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வையுங்கள் நாங்கள் பயப்படுவோமா என பார்க்கலாம்.

இது சிங்கள் பௌத்தர்களின் நாடு, இது சவுதியோ, பாகிஸ்தானோ, ஆப்கானிஸ்தானோ அல்ல. எமது முன்னோர்களின் இரத்தத்தில், கண்ணீரில் கட்டியெழுப்பிய நாடு இது. இதனை கொல்லையடிக்க முற்படுபவர்களுக்கு எதிராக நாம் அன்றும் செயற்பட்டோம், நாளையும் செயற்படுவோம்.

முஸ்லிம் கவுன்சிலுக்கு சுருக்கமாக சொல்லவேண்டியது என்னவென்றால் இந்த நாட்டில் பிக்குகளுக்கு நல்லிணக்கத்தை கற்பிக்க முஸ்லிம்களுக்கு உரிமையில்லை.” என மிகவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here