கடுமையான தாக்குதலுக்குள்ளான சிறுமி தொடர்பில் வெளியான தகவல்!

0
48

திருகோணமலையில் சிறுமியை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (05-06-2024) பிற்பகல் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.சிறுமியின் தாய், சித்தப்பா, பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குகுல் சமிந்த எனும் நபரும் மற்றுமொரு சந்தேகநபரும் இன்று அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தாயை உளநல வைத்தியர் ஒருவரிடம் அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சிறுமியை அனுராதபுரம் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here