கடைசி ஆதிவாசி மனிதர் மரணம்

0
151

பிரேஸிலின் அமேசன் காட்டில், கடந்த 26 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்த ஆதிவாசி மரணமடைந்துள்ளார்.

அவா்களது கூட்டத்தில் கடைசி நபரான அந்த ஆதிவாசியின் காட்டு வாழ்க்கைக்கு இடையூறு இல்லாமல் பிரேஸில் அரசு தொடா்ந்து கண்காணித்து வந்தது. அவா் ‘உலகின் மிகத் தனிமையான நபா்’ என்று அழைக்கப்பட்டு வந்தாா்.

இந்த நிலையில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் தனது இருப்பிடத்தில் இறந்து கிடந்ததாகவும் அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் அது இயற்கை மரணமாகவே கருதப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுமாா் 60 வயது இருக்கலாம் என்று கூறப்படும் அவரது உடல், தற்போது உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here