நுவரெலியா பொலிஸ் பிறிவிற்குட்பட்ட நுவரெலியா களுக்கலை பிரதேத்தில் நேற்று இரவு வியாபார நிலையமென்றில் உரிமையாளரை அதே வியாபார நிலையத்தில் தொழில் புரிந்த இருவர் கத்தியால் கழுத்து வெட்டி சம்பவம் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது
நேற்று மாலை வியாபாரம் முடிந்து வீடு திரும்பும் போது வியாபார நிலையத்தின் உரிமையாளருக்கும் இரு தொழிலாளிக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கை கலப்பாக மாறியது. தொழில் புரிந்த 25 வயது மதிக்கத்தக்க நபர் எனவும். வியாபார நிலையத்தின் உரிமையாளர் 50 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை எனவும் சம்பவத்தில் காயமடைந்த வியாபார நிலைய உரிமையாளர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நுவரெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏச் கே பிரமலால் தெரிவித்தார்
டி.சந்ரு செ.திவாகரன்