மறு அறிவித்தல் வரை விமான நிலையம், அரச, தனியார் வங்கிகளில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவாக மாற்றிக் கொடுக்க வேண்டாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
எனினும், இந்தச் செய்தியை இலங்கை மத்திய வங்கி மறுத்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியாலை இலங்கை ரூபாவாக மாற்ற முடியும் என விமான நிலையத்தின் முகாமையாளர் அறிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள எந்த வங்கியிலும் வழமை போன்று கட்டார் ரியாலை இலங்கை ரூபாவாக மாற்ற முடியும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.