கணிதபாடத்தில் அடைவுமட்டத்தின் அதிகாரத்தினை அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்!!

0
157

மாணவர்களுக்கான புதிய செயல் நூல் திட்டத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் தெரிவிப்பு.மலையக பாடசாலைகளில் கணிதபாடத்தில் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான நடவடிக்கையினை பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் ஆசிரியர்களும் மேற்கொள்ளவேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் தெரிவித்தார். அட்டன் சீடா நிறுவனத்தில் இடம் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான புதிய செயல்நூல் வழிகாடடியினை அறிமுகம் படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு அதிபர்கள் மத்தியில் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

இந் நிகழ்வின் போது கல்வி இராங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண்ääமற்றும் மத்திய மாகாணத்தில் உள்ள வலயகல்விபணிப்பாளர்கள் அதிபர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது மேலும் உறையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் இன்று மலையக பாடசாலைகளில் உள்ள மாணவர்கள் பொருளாதாரத்திலும்ääவளர்ச்சியிலும் குடும்ப சுழ்நிலையாலும் சற்று பின்தங்கி இருக்கிறார்கள் ஆகவே ஒட்டு மொத்தமாக கூறமுடியாது கற்பித்தல் விடயங்களில் கணிதபாடத்தில் மட்டும் தான் அடைவ மட்டம் குறைவு என குற முடியாது நாங்கள் இன்று 3800பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங் ஏற்பாடு செய்துள்ளளோம் இதேவேலை கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கள் முலமாக பதவி உயர்வழங்காத அதிகாரிகளுக்கு பதவிஉயர்வு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

05 07

நான் மாகாண கல்வி அமைச்சராக இருந்த காலபகுதியில் என்னால் முடிந்த சேவைகலை செய்து இருக்கின்றேன் அதேபொல் மத்திய அரசாங்கத்தில் நான் கல்வி இராஜாங்க அமைச்சாரக இருக்கின்றேன் இப்போதும் என்னால் முடிந்த சேவைகலை செய்து கொண்டிருக்கின்றேன்

எதிர்வரும் காலங்களிலும் என்னால் முடிந்த சேவைகலை செய்வேன் எனவும் தெரிவித்தார்.

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here