“கண்களுக்குக் கீழே கருவளையம் இருக்கா..!” – ஈஸியா ரிமூவ் பண்ண சூப்பர் டிப்ஸ்

0
51

தொடர்ந்து வேலை செய்தல் மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக இன்று பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்களின் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. இந்த கருவளையத்தை பல கெமிக்கல்கள் கலந்த பொருட்களைக் கொண்டு நீக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

எனவே அந்தக் கருவளையத்தை இயற்கையான முறையில் நாம் எவ்வாறு நீக்கலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டி உங்கள் கண்களை மூடி அதன் மீது இந்த வெள்ளரிக்காய் துண்டுகளை கால் மணி நேரம் முதல் அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள். இதனை தொடர்ந்து செய்வதின் மூலம் உங்களது கருவளையம் மிக எளிதில் மறையும்.

தக்காளி
தக்காளியையும் வெள்ளரிக்காயை போலவே நறுக்கி பத்து முதல் 15 நிமிடங்கள் உங்கள் கண் பகுதியில் கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் கருவளையம் எளிதில் மறையும்.

டீ பேக்
சூடு தணிந்து இருக்கும் டீ பேக்களை உங்கள் கண்களை மூடி அன்ன பாக்குகளை அப்படியே உங்கள் கண்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து விடுங்கள். இதில் இருக்கும் காஃப்பின் என்ற பொருள் உங்கள் கருவளையத்தை எளிதில் மாற்றி விடும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை நன்கு அரைத்து அதன் சாறை எடுத்து பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் தேய்த்து விட்டு அந்த பஞ்சை கால் மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு நீங்கள் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவலாம். இதனை தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் கருவளையம் எளிதில் மறையும்.

குளிர்ந்த பாலை பஞ்சில் நனைத்து உங்கள் கருவளையம் இருக்கும் பகுதியில் நன்கு தேய்த்து விட்டு மசாஜ் செய்து விடவும். இதனை தொடர்ந்து செய்வதின் மூலம் விரைவில் உங்கள் கருவளையம் மாறி இயல்பான நிறம் கிடைக்கும்.

மேற்கூறிய பொருள்களை நீங்கள் பயன்படுத்தி உங்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை எளிதில் நீக்க முடியும் இதனால் பக்க விளைவு ஏதும் உங்களுக்கு ஏற்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here