மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாறைகள் சரிவு, மரம் முறிந்து விழுதல் போன்ற அபாயம் நிலவுகின்றது.
அந்தவகையில் கண்டி – கம்பளை பிரதான வீதியில் கம்பளை எத்கால பகுதியில் வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் 21.05.2018 அன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை பிரதான வீதியில் ஒரு பகுதியில் இம்மரம் முறிந்து விழுந்ததனால் இவ்வீதியினூடான போக்குவரத்து ஒரு வழி போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.
மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கம்பளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)